ஐ.நா கூட்டத்திற்குப் பின் வெடித்த சர்ச்சை! அமெரிக்கா - ஈரான் இராஜதந்திர மோதல்
செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தைத் தொடர்ந்து அமெரிக்காவை விட்டு வெளியேற மறுத்த ஈரானிய இராஜதந்திரிகள் அந்நாட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்டதாக அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது.
ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) இதனை முற்றாக மறுத்துள்ளார்.
முன்னரே புறப்பட்ட ஒருவரைத் தவிர ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து ஈரானிய இராஜதந்திரிகளும் திட்டமிட்டபடி உரிய நேரத்தில் வெளியேறினர் என அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
தூதரகக் குழுவினர்
ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானியத் தூதரகக் குழுவினர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற அமெரிக்க வெளியுறவுத் துறையின் கோரிக்கைக்கு இரண்டு ஈரானிய இராஜதந்திரிகள் கீழ்ப்படியவில்லை எனப் பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க அதிகாரி ஒருவரைக் மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
All Iranian diplomats who attended UNGA, except one who departed earlier, left as scheduled. Taking pride in fake diplomat "expulsion" is inappropriate for the head of any diplomatic corps. It oozes of desperation and defeat, and is inconsistent with UN host nation obligations. https://t.co/SeWdCEHTWH
— Seyed Abbas Araghchi (@araghchi) October 4, 2026
இந்தநிலையில் இராஜதந்திரிகளை வெளியேற்றியதாகப் பெருமை பேசுவது பொருத்தமற்றது என்றும் அது நம்பிக்கையின்மை மற்றும் தோல்வியின் வெளிப்பாடு என்றும் அராக்சி சாடியுள்ளார்.
மேலும், இத்தகைய நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையை நடத்தும் நாடு என்ற வகையில் அமெரிக்காவிற்கு இருக்கும் கடமைகளுக்கு முரணானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |