அணு ஆயுதத்தை நெருங்கியது ஈரான்! அமெரிக்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பால் பதற்றம்
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் மிகவும் நெருக்கமான நிலையில் இருப்பதாக அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ் ரைட் எச்சரித்துள்ளார்.
செனட் ஆயுதப் படைக் குழுவின் ஆலோசனையில் பேசிய அவர், ஒரு டன் யுரேனியத்தை அணு ஆயுதத் தரத்திற்குச் சுத்திகரிப்பதற்கு ஈரான் இன்னும் சில வாரங்களே தொலைவில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
90 வீதத்திற்கும் அதிகமான செறிவூட்டப்பட்ட யுரேனியம் அணு ஆயுதத் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் நிலையில், ஈரானிடம் தற்போது 60 வீதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பு உள்ளதாகவும், இது மிகவும் கவலைக்குரிய விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போருக்கான முக்கிய காரணம்
இதன்படி, உலகளாவிய பாதுகாப்பை உறுதி செய்ய ஈரானின் அணுசக்தித் திட்டம் முற்றிலும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே இலக்கு என்றும் அவர் ரைட் வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் பல உயர் அதிகாரிகள், ஈரான் உடனான தற்போதைய போருக்கான காரணங்களில் ஒன்றாக இந்த யுரேனிய இருப்பைச் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
அத்துடன், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால் ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |