மத்திய கிழக்கில் பதற்றம் : இலங்கையின் தங்க விலையில் சடுதியான மாற்றம்
Gold Price in Sri Lanka
Daily Gold Rates
Iran-Israel War
By Sathangani
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இலங்கையின் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் (28.02.2025) ஒரே நாளில் மூன்று முறை தங்கம் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 410,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
புதிய விலை
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 379,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,413 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை உலக சந்தையில் தொடர்ந்தும், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பை பதிவு செய்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மரண அறிவித்தல்