மீண்டும் போர்! ஈரான் ட்ரம்புக்கு விடுத்துள்ள மறைமுக எச்சரிக்கை
அமெரிக்கப் படைகளை ஈரான் கொல்வது ஒரு சிவப்பு எல்லையைத் தாண்டுவதாக அமையுமா என்று இன்று கேட்கப்பட்ட கேள்விக்கு, போரை மீண்டும் தொடங்குவதற்கு அதுவொரு நல்ல காரணமாக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது ட்ரம்ப் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
"ஆம், அது ஒரு நல்ல காரணமாக இருக்கும். உங்களிடம் நேர்மையாகச் சொல்கிறேன், அவர்கள் அமெரிக்கப் படைகளைக் கொன்றால், நான் மிக விரைவாக அந்த நடவடிக்கையை (போரைத் தொடங்குவது) எடுப்பேன் என்று நினைக்கிறேன்." என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
போர்நிறுத்தத்தின் தற்போதைய நிலை
இதேவேளை, ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தங்களுக்கு இடையிலான போர்நிறுத்தத்தின் தற்போதைய நிலை குறித்து முரண்பட்ட செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த வார இறுதியில் ஒரு உடன்பாடு எட்டப்படலாம் என்று ட்ரம்ப் நேற்று உறுதியாகக் குறிப்பிட்டிருந்த போதிலும், இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்…. 18 மணி நேரம் முன்