தாக்குதலுக்குள்ளான கத்தார் எண்ணெய்க் கப்பல்...! மீட்கப்பட்ட ஊழியர்கள்
கத்தார் நிறுவனத்தால் இயக்கப்படும் அக்வா 1 (Aqua 1) எண்ணெய் டாங்கர் மீது ஈரானியக் குரூஸ் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து அதிலிருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் சற்றுமுன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், டாங்கரில் இருந்த 21 ஊழியர்களும் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
புரட்சிகர காவல்படை
கத்தார் எனர்ஜி (QatarEnergy) நிறுவனத்தால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட இந்த டாங்கர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் (எண்ணெய் கசிவு போன்றவை) ஏற்படவில்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்கப்பட்ட அந்த டாங்கர் இஸ்ரேலுக்குச் சொந்தமானது என உரிமை கோரியுள்ள IRGC, அதனாலேயே தமது கடற்படை ஏவுகணையால் அந்த டாங்கர் இலக்கு வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்