ஈரான் கொடுத்த வாய்ப்பை இழந்தது இலங்கை! எண்ணெய் கப்பல் இல்லாததால் ஏற்பட்ட நிலை
இலங்கையிடம் கப்பல்கள் இல்லாத காரணத்தினால் ஈரானிடம் இருந்து எண்ணெய் மற்றும் பிற வசதிகளை பெறுவதற்கு சாத்தியம் இல்லை என்று அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடக சந்திப்பின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கைக்கு எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான ஈரானின் முன்மொழிவை அமைச்சர் வரவேற்றுள்ளார்.
ஈரான் தூதுவரின் அறிவிப்பு
அதன்போது அவர், “கப்பல்களைக் கொண்ட நாடுகள் அத்தகைய வசதியிலிருந்து பயனடைய முடியும். எங்களிடம் கப்பல்கள் இல்லை.
ஈரானிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் திறனும் எங்களிடம் இல்லை. தூதுவரின் முன்மொழிவை நாங்கள் வரவேற்கிறோம்.” என்றார்.
அண்மையில் நட்பு நாடு என்ற முறையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதில் ஈரானின் உறுதிப்பாட்டை இலங்கைக்கான ஈரான் தூதுவர் வலியுறுத்தியிருந்த நிலையில், கோரிக்கை விடுக்கப்பட்டால், எண்ணெய் உட்பட அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஈரான் தயாராக உள்ளது என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |