சர்வதேசத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ள ஈரான் அதிபர் தேர்தல்
ஈரான் (iran) அதிபர் தேர்தல் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஷி (Ebrahim Raisi) உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்தநிலையில் புதிய அதிபர் தெரிவு செய்வதற்கான தேர்தல் அந்நாட்டில் இடம்பெற்றுள்ளது.
அதிபர் தேர்தலில் கடும்போக்காளர் சயீத் ஜலீலிக்கும் மிதவாத வேட்பாளர் மசூத் பெசெஷ்கியனிற்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
19 மில்லியன் வாக்குகள்
இதுவரை 19 மில்லியன் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் பழைமைவாத முகாமில் பிளவு ஏற்பட்டிருக்கும் நிலையில் 69 வயதான சீர்திருத்தவாதியான மசூத் பெசஷ்கியான் வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்துள்ளார்.
இதுவரை வெளியாகியுள்ள பெறுபேறுகளுக்கமைய பெஸஸ்கி முன்னிலையிலுள்ளார்.
அவர் இதுவரை 8.3 மில்லியன் வாக்குகளை பெற்றுள்ளார். அத்துடன் வேட்பாளரான ஜிலாலி 7.2 மில்லியன் வாக்குகளை பெற்றுள்ளதாக ஈரான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் அதிபர் தேர்தல்
ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு நீதித் துறை தலைவர் இப்ராஹிம் ரய்லி உட்பட ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தற்போதைய அதிபர் ஹசன் ரூஹானிக்கு நெருக்கமானவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இப்ராஹிம் ரய்லி (Ebrahim Raisi) உள்பட அந்நாட்டின் அணுசக்தி துறையின் முன்னாள் ஆலோசகர் சயீத் ஜலீல், முன்னாள் தளபதி மோசின் ரேசாய், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ரசா ஜகானி, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் ஹுசைன் காஜிஸ்தி, அந்நாட்டு மத்திய வங்கியின் தலைவர் அப்துல் நசீர் ஹிம்மதி, மிதவாத வேட்பாளர் மசூத் பெசெஷ்கியனி ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |