இஸ்ரேல் மீது ஈரானின் புதிய ரக ஏவுகணைத் தாக்குதல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி புதிய வகை ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாகவும், அவற்றை தமது வான் பாதுகாப்பு கட்டமைப்பு அடையாளம் கண்டுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் (IDF) அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஒரு மணி நேரத்திற்குள் இஸ்ரேலிய இராணுவம் விடுத்துள்ள இரண்டாவது அபாய எச்சரிக்கை இதுவாகும் என அல்ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலின் வான்பரப்பிற்குள் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவை ஈரானின் புதிய ரக ஏவுகணைகள் என இஸ்ரேலிய பாதுகாப்புத் தரப்பு அடையாளப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம்
குறித்த தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பொதுமக்கள் உடனடியாகப் பாதுகாப்பான பதுங்கு குழிகளுக்குச் செல்லுமாறு இஸ்ரேலிய இராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில் லெபனானில் இருந்து ஏவப்பட்ட ரொக்கெட் தாக்குதல் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் அபாய எச்சரிக்கைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |