முற்றுகையை உடைப்போம்...! அமெரிக்கா - இஸ்ரேலுக்கு மொஜ்தபா கமேனி விடுத்த நேரடி எச்சரிக்கை
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றமான சூழலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரானிய இராணுவ தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து வரும் நிலையில் எதிரிகளுக்குப் புதிய கசப்பான தோல்விகளை வழங்க ஈரானியக் கடற்படை முழு வீச்சில் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் இறையாண்மை
ஈரானின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் இராணுவம் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாது என்பதையே கமேனியின் இந்தப் பேச்சு உறுதிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒருபுறம் ஒப்பந்தம் எட்டப்பட்டுவிட்டதாகக் கூறி வரும் நிலையில் ஈரானிய உச்ச தலைவரின் இந்த ஆக்ரோஷமான உரை சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், உச்ச தலைவரின் இந்த நேரடி எச்சரிக்கை பதற்றத்தை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |