அதிகரிக்கும் பதற்றம் - மீறப்படும் போர் நிறுத்தம்...! தாக்குதலுக்கு தயாராகும் தரப்புக்கள்
அமெரிக்காவுடனான புதிய சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைக்கு எந்தத் திகதியும் நிர்ணயிக்கப்படவில்லை என ஈரான் வெளியுறவுத் துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே தெரிவித்துள்ளார்.
அத்துடன் வாஷிங்டன் தனது “அதிகபட்ச” கோரிக்கைகளைக் கைவிட மறுப்பதைக் கடுமையாக அவர் சாடியுள்ளார்.
ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து வரும் நிலையில் எதிரிகளுக்குப் புதிய கசப்பான தோல்விகளை வழங்க ஈரானியக் கடற்படை முழு வீச்சில் தயாராக இருப்பதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி குறிப்பிட்டுள்ளார்.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அமெரிக்கா ஈரான் துறைமுகங்களை முற்றுகையிடுவதை நிறுத்தா விட்டால், ஹோர்முஸ் நீரிணையை திறக்க மாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, போர் நிறுத்தம் இருந்தபோதிலும் தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதுடன், காசாவில் அது விதித்ததைப் போன்ற “மஞ்சள் கோடு” ஒன்றை அமைத்துள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும் உடன்பாடு எட்டப்படும் வரை ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை தொடரும் என்றும் தெஹ்ரானின் மிரட்டலுக்கு வாஷிங்டன் அடிபணியாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தகக்கது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |