ஹமாஸ் தலைவர் படுகொலை : ஈரான் ஆன்மிக தலைவர் விடுத்த சூளுரை
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா(Ismail Haniyeh )ஈரானில்(iran) உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் இஸ்ரேலை பழிக்கு பழி வாங்கப்போவதாக ஈரானின் உயர் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி(Ayatollah Seyyed Ali Khamenei) சூளுரைத்துள்ளார்.
இது தொடர்பாக அலி கமேனி கூறுகையில் "ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வான்வழி தாக்குதல் மூலம் இஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்டதற்குப்பின், இஸ்ரேல்(israel) தனக்குத்தானே கடுமையான தண்டனைக்கு தயார்படுத்தியுள்ளது.
மதிப்பிற்குரிய விருந்தாளி
எங்களுடைய பணியான பழிக்குப்பழி குறித்து நாங்கள் பரிசீலனை செய்வோம் என காமெனி தனது அதிகாரபூர்வ இணைய தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஹனியா எங்களுடைய நாட்டின் மதிப்பிற்குரிய விருந்தாளி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல்- ஈரான் இடையே நேரடி போர் நடைபெறலாம் என அஞ்சப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |