தாக்குதல்களை இரட்டிப்பாக்கும் ஈரான்! புரட்சிகர காவல்படையின் தளபதி அறிவிப்பு
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிரான ஈரானின் தற்காப்பு நிலைப்பாட்டில் ஒரு வியத்தகு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரானிய புரட்சிகர காவல்படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் மஜித் மூசவி சமிக்ஞை அளித்துள்ளார்.
அவர் வெளியிட்ட காணொளியில், இனி புதிய கட்டப் போர் தொடங்கியுள்ளதாகவும், இரட்டை ஏவுகணை ஏவுதளங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த புதிய அமைப்பில் புதுப்பிக்கப்பட்ட ஃபதே மற்றும் கைபர்-ஷேக்கான் (கைபர்-பஸ்டர்) போன்ற இரட்டை ஏவுகணை ஏவுதளங்களுடன், முந்தைய அனைத்துத் தாக்குதல்களும் இருமடங்காகும் என அவர் கூறியுள்ளார்.
கடுமையான பதிலடி
இந்நிலையில், முன்பு நடந்த அனைத்து தாக்குதல்களும் இப்போது இரட்டிப்பாக இருக்கும் என்று அவர் எச்சரித்தது, எதிரிகளின் எந்த நடவடிக்கைக்கும் கடுமையான பதிலடி வழங்கப்படும் என்பதை வலியுறுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
.#BREAKING : 'New Phase Of War Begins' - Iran escalates missile threat, says 'all previous strikes are now multiplied by two'
— World 24 Live (@W24live) April 7, 2026
IRGC Aerospace Force Commander Brig. Gen. Seyed Majid Mousavi stated that a new phase of the conflict has begun with the deployment of dual-launch Fateh… https://t.co/LvSugsegWr pic.twitter.com/8st9XFhHp4
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |