மீண்டும் பேச்சு மேசைக்கு திரும்பும் அமெரிக்கா மற்றும் ஈரான் : இம்முறை சுவிஸ் அல்ல
Donald Trump
Qatar
Iran
Iran-US Conflict
By Jaso
ஈரான் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை கத்தாரில் உள்ள தோஹாவில் நாளை (ஜூன் 30) நடைபெற உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டுள்ளதை ஈரான் உறுதிப்படுத்தவில்லை.
வெள்ளை மாளிகையின் அறிவிப்பு
தோஹாவில் நடைபெறும் அமெரிக்கப் பேச்சுவார்த்தைக் குழுவிற்கு சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் தலைமை தாங்குவார்கள் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறினார்.

"புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து நாங்கள் தொடர்ந்து விவாதித்து வரும் நிலையில், சிறப்புத் தூதர் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் இந்த வாரம் உயர்மட்ட சந்திப்புகளுக்காக தோஹாவிற்குப் பயணம் மேற்கொள்வார்கள்," என்று அவர் பொக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்