7 லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக அழிந்த எரிமலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
ஈரான் மற்றும் பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ளது தப்தான் எரிமலை, 13,000 அடி உயரமுடையது.இந்த எரிமலை 7 லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக எந்த அசைவும் இல்லாமல், 'அழிந்துவிட்டது' என கருதப்பட்டு வந்த நிலையில் தற்போது திடீரென செயல்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த, 2023 ஜூலை முதல் 2024 மே வரையிலான 10 மாதங்களில் இந்த எரிமலையின் உச்சிப் பகுதி, 9 செ.மீ.உயர்ந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
செயற்கைக்கோள் எடுத்த படங்களில் இந்த வளர்ச்சி
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் 'சென்டினல்--1' செயற்கைக்கோள் எடுத்த படங்களில் இந்த வளர்ச்சி கண்டுபிடிக்கப்பட்டது.

எரிமலையின் ஆழத்தில் சூடான திரவங்கள், வாயுக்கள் குவிவதால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
கடந்த, 7 இலட்சம் ஆண்டுகளாக செயல்பாடற்று கிடந்த இந்த எரிமலை முன்னதாக 'அழிந்த எரிமலை' என வகைப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது அது 'உறங்கும் எரிமலை' என மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 11 மணி நேரம் முன்