மீண்டும் போர் மூளும் அபாயம் - ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல் - இராணுவத்தின் பலர் பலி
ஈரானின் முக்கிய துறைமுக நகரங்கள் மீது அமெரிக்க ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப்பகுதியில் இரண்டு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறி அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானை பலவீனப்படுத்துவதற்காக தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் தனது எக்ஸ் (X) தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல்
ஈரான் எச்சரிக்கை
தெற்கு ஈரானின் கடற்கரை பகுதிகளில் பல வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையிலேயே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இரவோடு இரவாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஈரானிய இராணுவத்தின் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக பி.பி.சி செய்தி வௌியிட்டுள்ளது.
கொல்லப்பட்ட வீரர்கள் விமானப்படை மற்றும் கடற்படையில் பணியாற்றியவர்கள் என பல ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்த வீரர்கள் பண்டார் அப்பாஸ் மற்றும் புஷெர் ஆகிய பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தம்மை தாக்கினால் ஹார்மூஸ் நீரிணையை மீண்டும் மூடுவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இலங்கை அரகலய சதுரங்கத்தில் மகிந்தவின் அரசியலை உருமாற்றிய 121 நாட்கள் 1 மணி நேரம் முன்