ஈரானின் முக்கிய விமான நிலையத்தை குறி வைத்து அதிரடி தாக்குதல் நடத்திய அமெரிக்கா!
United States of America
Iran
Middle East
World
Strait of Hormuz
By Shalini Balachandran
தென்கிழக்கு ஈரானில் உள்ள ஈரான் ஷாஹர் விமான நிலையம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானிய அரசு செய்தி நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் தீயணைப்பு வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானப் போக்குவரத்து
விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து வசதிகள் கட்டிடம் மற்றும் வானிலை ஆய்வு நிலையம் ஆகியவற்றின் மீது எறிகணைகள் தாக்கியதில் இரண்டு கட்டமைப்புகளும் சேதமடைந்தது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவசரக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் இருப்பினும் பணியில் இருந்த தீயணைப்பு வீரர் காலித் காதேரி இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |