ஈரான் பூமியிலிருந்தே துடைத்தெறியப்படும்! ட்ரம்பின் எச்சரிக்கையால் அதிகரித்த பதற்றம்
அமெரிக்கக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்த நாடு பூமியிலிருந்தே துடைத்தெறியப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடுமையான பதிலடி
அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கைகள் "ப்ரொஜெக்ட் ஃப்ரீடம்" என்ற திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளின் இருப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

Image Credit: Yahoo
தற்போதைய பேச்சுவார்த்தைகளில் ஈரானின் அணுகுமுறை ஓரளவு மென்மையாக மாறியுள்ளதாகத் தான் கருதுவதாகவும், இருப்பினும் அமெரிக்கச் சொத்துக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிநவீன ஆயுதங்கள் தயார்
இதன்படி, தங்களிடம் முன்பை விட அதிநவீன ஆயுதங்களும் வெடிமருந்துகளும் தாராளமாக இருப்பதாகவும், தேவைப்பட்டால் உலகின் மிகச்சிறந்த அந்த ராணுவத் தளவாடங்களைப் பயன்படுத்தத் தயங்கப்போவதில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், தென் கொரிய சரக்குக் கப்பல் உள்ளிட்ட பிற நாட்டுச் சொத்துக்களையும் ஈரான் குறிவைப்பதாகக் குற்றம் சாட்டிய ட்ரம்ப், அமெரிக்கா தலைமையிலான இந்த பாதுகாப்புப் பணியில் தென் கொரியாவும் இணைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 13 மணி நேரம் முன்