இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப் பணிகள்
தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து வணங்கும் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள், எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தாயகப் பகுதிகள் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளன.
இதனை முன்னிட்டு, தமிழர் தாயகப் பகுதிகளில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளும் சிரமதானப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், 2009ஆம் ஆண்டு இறுதிப் போரின்போது உருவாக்கப்பட்ட இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழுவினர், மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சிரமதானப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மாவீரர் நாள் நினைவேந்தல்
இம்முறையும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான பணிகளில் மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழுவினர் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் சிரமதானப் பணிகள், ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் அனைத்து உறவுகளும் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு பணிக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |