முன்னாள் உதவி காவல்துறை அத்தியட்சகரால் மட்டக்களப்பில் வெடித்த காணி சர்ச்சை: பொதுமக்கள் எதிர்ப்பு

Sri Lanka Sri Lankan Peoples
By Pavi Nov 10, 2026 11:13 AM GMT
Report

முன்னாள் உதவி காவல்துறை அத்தியட்சகர் எனக் கூறப்படும் குமாரசிறி என்பவரின் காணி உரிமை தொடர்பில் மட்டக்களப்பு - திருப்பெருந்துறை மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மட்டக்களப்பு, திருப்பெருந்துறையில் அமைந்துள்ள மறுமலர்ச்சி விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் தனக்குக் காணி இருப்பதாகக் கூறி, குமாரசிறி என அழைக்கப்படும் முன்னாள் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் தொடர்ச்சியாகக் காணி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2025ஆம் ஆண்டு முதல் குறித்த நபர் இந்த இடத்தில் தனக்குக் காணி உரிமை இருப்பதாகக் கூறி, வேலிக் கம்புகள் மற்றும் மரக்கட்டைகளை நாட்டி காணியைச் சுற்றிவளைக்க முயற்சித்து வருவதாகவும், இதனால் அப்பகுதி மக்களுக்கும் அவருக்கும் இடையில் தொடர்ச்சியாகப் பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிலக்கரி இறக்குமதி நட்டத்தை மக்கள் மீது சுமத்த வேண்டாம்: மனுவை மீளப்பெறத் தயார்

நிலக்கரி இறக்குமதி நட்டத்தை மக்கள் மீது சுமத்த வேண்டாம்: மனுவை மீளப்பெறத் தயார்

ஜனாதிபதிக்கும் ஏற்கனவே முறைப்பாடு

இந்நிலையில், கடந்த மாதம் குறித்த இடத்தில் நாட்டப்பட்டிருந்த வேலிக் கம்புகள் மற்றும் மரக்கட்டைகள் பிடுங்கி அகற்றப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து இன்று (10.11.2026) மீண்டும் அங்கு வந்த குறித்த நபர், கொங்கிரீட் தூண்களை அமைப்பதற்காகக் கற்கள், மணல், சீமெந்து மற்றும் கொங்கிரீட் தூண்களை அங்கு இறக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் உதவி காவல்துறை அத்தியட்சகரால் மட்டக்களப்பில் வெடித்த காணி சர்ச்சை: பொதுமக்கள் எதிர்ப்பு | Thiruperunthurai Renaissance Sports Club Ground

இதனைத் தொடர்ந்து அங்கு ஒன்றுகூடிய கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, அவரை அந்த இடத்திலிருந்து வெளியேறச் செய்துள்ளனர். இந்தக் காணி விவகாரம் தொடர்பில் கிராம மக்கள் ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த மாதமே, மறுமலர்ச்சி விளையாட்டுக் கழகத்தின் உரிமையாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாகவும், கிராம மக்களின் சார்பாகவும் ஜனாதிபதிக்கு எழுத்துமூலமான கடிதம் ஒன்றை அனுப்பி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையிலும், குறித்த காணி விவகாரத்தில் தீர்வு எட்டப்படாமல் மீண்டும் கட்டுமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் எழுப்பும் கேள்விகள்

  • மறுமலர்ச்சி விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் குறித்த நபருக்கு எவ்வாறு காணி உரிமை கிடைத்தது?
  • இந்தக் காணியை அவருக்கு வழங்கியது யார்?
  • பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டுத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் மைதானத்திற்குள் தனிநபர் ஒருவருக்கு எவ்வாறு காணி உரிமை வழங்கப்பட்டது?
  • இந்தக் காணி உரிமை தொடர்பான ஆவணங்கள் என்ன?
  • இதன் பின்னணியில் யார் இருக்கின்றனர்? ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளனவா?

எனப் பல்வேறு கேள்விகளைப் பொதுமக்கள் எழுப்புகின்றனர். பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் இளைஞர்களின் விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் உரிய விளையாட்டு மைதானத்தின் காணி உரிமை தொடர்பான உண்மை நிலை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும், ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட முறைப்பாடு தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பொது விளையாட்டு மைதானங்கள் தனிநபர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக அபகரிக்கப்படக் கூடாது.

மறுமலர்ச்சி விளையாட்டுக் கழக மைதானத்தின் காணி விவகாரத்தில் உண்மை நிலை வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு, மக்களின் பொதுச் சொத்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாகும்.

மாத்தளை ரயில் பாதையில் மகாவலி ஆற்றின் குறுக்கே புதிய பாலம்: அமைச்சரவை அனுமதி

மாத்தளை ரயில் பாதையில் மகாவலி ஆற்றின் குறுக்கே புதிய பாலம்: அமைச்சரவை அனுமதி

A9 வீதி விபத்துக்கு SLTB பேருந்தின் சாரதியே காரணம்: காவல்துறை அறிக்கை

A9 வீதி விபத்துக்கு SLTB பேருந்தின் சாரதியே காரணம்: காவல்துறை அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023