ஹோர்முஸை கடப்பதற்கு ஈரான் விதித்துள்ள நிபந்தனைகள்
ஹோர்முஸ் நீரிணை புதிய கடல்சார் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அ.ஜி.ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், நீரிணையில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை ஈரான் சார்பாக விவரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி "ஹோர்முஸ் நீரிணைக்கான புதிய கடல்சார் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது," என்று இப்ராஹிம் அ.ஜி.ஜி கூறியதை தொடர்ந்து ஈரான் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அங்கீகாரம் பெற்ற வர்த்தகக் கப்பல்கள்
இது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய அமைப்பின் கீழ், ஐ.ஆர்.ஜி.சி கடற்படையின் அங்கீகாரம் பெற்ற வர்த்தகக் கப்பல்கள் மட்டுமே, தேவையான சுங்கக் கட்டணங்களைச் செலுத்திய பிறகு, குறிப்பிட்ட வழித்தடங்களில் செல்ல அனுமதிக்கப்படுகின்றன என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் “அமெரிக்கா ஈரானியக் கப்பல்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படுத்த முயன்றால், இந்த நிலைமையை எளிதில் மாற்றிவிட முடியும்.” என்றும் அவரால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரானியக் கப்பல்கள் முழுமையாகச் சுதந்திரமாகப் பயணிப்பதற்கான கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கும் வரை, ஹோர்முஸ் நிலைமை கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு மாற்றமின்றி இருக்கும் என்று கதம் அல்-அன்பியா இராணுவத் தலைமையகம் மேலும் தெரிவித்தது.
சர்வதேச ஊடக விளக்கங்களின் படி பல்வேறு கோணங்களில் இருந்து பார்க்கும்போது, ஈரான் இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நெருக்கடிப் பகுதியை, பிராந்தியப் பாதுகாப்புச் சூழலிலும், எரிசக்திச் சந்தையிலும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது.
மேலும், மேற்கொண்டு நடைபெறக்கூடிய எந்தவொரு பேச்சுவார்த்தைகளிலும், ஈரானின் இராஜதந்திரக் கணக்கீடுகளில் இதுவே ஒருவேளை மிக முக்கியமான பேரம்பேசும் கருவியாகவும் அமையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |