அமெரிக்காவின் அவமானகரமான தோல்வி...! ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
அமெரிக்கா இந்த மோதலில் வரலாற்றுச் சிறப்புமிக்க அவமானகரமான தோல்வியைச் சந்தித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஆனால் அந்தத் தோல்வியை ஒப்புக்கொள்ளும் தைரியம் வாஷிங்டனுக்கு இல்லை என்றும் ஈரான் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈரானிய புரட்சிகர காவல் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் ஹொசைன் மொஹெபி (Hossein Mohebbi) இதனை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய தாக்குதல்
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் மூடிய ஹோர்முஸ் நீரிணையைத் (Strait of Hormuz) திறக்க அமெரிக்காவால் முடியாமல் போனதே அந்நாட்டின் தோல்விக்கான தெளிவான சான்று என மொஹெபி சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா தன் முழு இராணுவப் பலத்தையும் பயன்படுத்தியும் நீரிணையை மீண்டும் திறக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க ராணுவத் தளங்கள், ஈரானின் தாக்குதல்களால் அமெரிக்காவிற்கே பாதுகாப்பற்ற சுமையாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வளைகுடாப் பகுதி மற்றும் வடக்கு ஈராக்கில் அமைந்திருந்த அமெரிக்க உளவுத்துறை மையங்கள் மீது ஈரானிய ஏவுகணைகள் வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளன.
இது அமெரிக்க உளவுத்துறைக்கு ஏற்பட்ட பாரிய தோல்வி என்றும், அவை ஈரானியத் தாக்குதலுக்கு எட்டாத தொலைவில் இல்லை என்பதை நிரூபித்துள்ளதாகவும் மொஹெபி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |