ஈரானின் அனுமதியின்றி ஹோர்முஸை கடக்க முயலும் கப்பல்கள்! புரட்சிகர காவல்படை கடும் எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்கள், ஈரான் அங்கீகரிக்காத வழித்தடங்களைப் பயன்படுத்தினால் அவை மீது நிச்சயமான நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களும் ஈரானால் அறிவிக்கப்பட்ட ஒரே பாதுகாப்பான பாதையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, அவ்வாறு செய்யத் தவறினால் ஈரானிய கடற்படையின் கடும் நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதிய வழிமுறை
இதேவேளை, ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் செல்லும் கப்பல்களைக் கையாள்வதற்கு ஈரான் புதிய வழிமுறை ஒன்றை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்தச் செய்தி குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் புரட்சிகர காவல்படையிடமிருந்து இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |