ஜனாதிபதியை விட பஷிலுக்கு உயர்பதவியா?
அரசாங்கம் தன்னால் கூட்டாக இணைந்து செயலாற்ற முடியாது என்பதை மீண்டும் நிருபித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பஷில் ராஜபக்க்ஷ அரசாங்கத்தில் இணைந்துகொண்டால் எரிபொருள்களின் விலை குறைக்கப்படுமா என கேள்வி எழுப்பியுள்ள அவர் பஷில் ராஜபக்க்ஷவிற்கு ஜனாதிபதியை விட உயர்ந்த பதவி வழங்கப்படுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
பஷில் ராஜபக்க்ஷ தலையிட்டிருந்தால் எரிபொருள் விலைகள் குறைவடைந்திருக்கும் என சிலர் தெரிவித்திருப்பது பொதுஜனபெரமுன அரசாங்கத்திற்குள் காணப்படும் கருத்து வேறுபாடுகள் பிளவுகளை வெளிப்படுத்தியுள்ளது.
அவரது கடந்தகால முயற்சிகள் இதுவரை வெற்றியளிக்காததால் பஷில் ராஜபக்க்ஷவினால் சமூகபொருளாதார புரட்சியை மாற்றமுடியும் என சில தனிநபர்கள் கருதக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.