இயேசு கிறிஸ்துவின் சிலையை உடைத்த இஸ்ரேல் வீரர்கள் :எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை
Benjamin Netanyahu
Israel
Lebanon
By Jaso
லெபனான் உள்ள ஒரு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது, இஸ்ரேல் வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்து சிலுவையை உடைக்க, மற்றொரு வீரர் அதை புகைப்படம் எடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அந்த இரு வீரர்கள் மீது இஸ்ரேல் இராணுவம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் செய்தது. வீரர்களின் நடத்தை, இராணுவத்தின் உத்தரவுகளை மீறுவதாகும் எனக் கூறி 30 நாட்கள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
இஸ்ரேல் தரப்பிலிருந்தும் கடும் கண்டனம்
வீரர்களின் இச்செயலை இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரும் கண்டித்திருந்தனர்.

மத கட்டிடங்கள் மற்றும் கலைப்பொருட்களைக் கையாள்வதற்கான ராணுவ நெறிமுறைகள் அப்பகுதியில் உள்ள வீரர்களுக்கு மீண்டும் வலியுறுத்தப்பட்டன என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
2 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி