இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்! நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜோ பைடன்
இஸ்ரேல் மற்றும் காசாவுக்கிடையிலான போர் நிறுத்தம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைமுறைப்படுத்தப்படுமென எதிர்ப்பார்க்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பில் கட்டார் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை தொடர்ந்தே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
போர் நிறுத்தம்
போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுக்கள் தொடர்ந்து வரும் நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை இதில் சாதகமான முன்னேற்றம் ஏற்படும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தரப்பினரை விடுவிப்பது தொடர்பான புதிய ஒப்பந்தத்தை ஹமாஸ் இயக்கம் ஏற்றுக் கொள்ளுமா இல்லையா என்பது தொடர்பில் தற்போது சந்தேகங்கள் எழுந்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
போர் பரவல்
மேலும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கிடையிலான போர் வேறு நாடுகளுக்கு பரவுவதை தடுப்பதன் முக்கியத்துவத்தை ஜோர்தான் வெளிவிவகார அமைச்சருடான சந்திப்பின் போது அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |