தாக்குதலின் அடுத்தகட்டமாக எல்லையில் பீரங்கிகளை குவித்துள்ள இஸ்ரேல்!
இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலானது வலுவடைந்து பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் காசாவை சுற்றிவளைக்கும் விதமாக பீரங்கிகளையும் ராணுவ வீரர்களையும் இஸ்ரேல் குவித்துள்ளதாக கூறப்படுகிறது .
இருதரப்பினருக்கும் மாறி மாறி தொடரும் தாக்குதலில் பல்லாயிரங்கணக்கானோர் பலியாகியுள்ளதோடு ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து உயிர் அச்சத்தில் இருக்கின்றனர்.
தொடர்ந்து 14 நாட்களாக நடைபெறும் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவமானது தரை வழியாகவும் வான் மற்றும் கடல் வழியாகவும் தாக்குதலை நடத்துகிறது.
அடுத்தகட்ட தாக்குதல்
இந்நிலையில் தாக்குதலின் அடுத்தகட்டமாக இஸ்ரேலின் எல்லையருகே காசாவை சுற்றிவளைக்கும் விதமாக பீரங்கிகளையும் ராணுவ வீரர்களையும் இஸ்ரேல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் லெபெனானிலிருந்து இஸ்ரேல் படைகளை நோக்கி பீரங்கிகளை தாக்கியளிக்கும் ஏவுகணைகள் ஏவப்பட்டன என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
அதில் 9 ரொக்கெட்களில் 4 ரொக்கெட்கள் அளிக்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதில் தாக்குதல்
அதனை தொடர்ந்து லெபென்னான் தனது எல்லையில் எந்த பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குள் ரொக்கெட் தாக்குதலை செய்ததோ அந்த பகுதிக்கு இலக்கு வைத்து இஸ்ரேல் படைகள் பதில் தாக்குதல் கொடுத்தன.
ஹிஜ்புல்லா பயங்கரவாத உட்கட்டமைப்பும், பீரங்கிகளை பயன்படுத்தி தாக்கியதை தெரிவித்த இஸ்ரேல் படைகள் பயங்கரவாத பிரிவு ஒன்றையும் ஆளில்லா விமானம் மூலம் தாக்கி அளித்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.