இஸ்ரேல் - ஈரான் கலவரத்தின் எதிரொலி: டுபாயில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்கள்
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினையின் விளைவாக இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் டுபாயில் சிக்குண்டு இருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
அங்கு நிலவுகின்ற பதற்றமான சூழல் தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
டுபாயில் சிக்கித் தவிக்கின்றனர்
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் காரணமாக விமானப் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில், Fly Dubai விமானம் FZ 1625 இல் இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் செல்ல ஆயத்தமான நிலையில் இந்த சூழலின் காரணமாக இலங்கையர்கள் குழு டுபாயில் சிக்கித் தவிக்கின்றனர்.
இஸ்ரேல் எல்லைக்குள் ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக கிடைத்த தகவலையடுத்து, பயணிகளுடன் சில இலங்கையர்களை உள்ளடக்கிய விமானம் டுபாய்க்கு திருப்பி விடப்பட்டது.
விமான தாமதங்கள்
இன்னும் சூழல் வழமைக்கு திரும்பாததால் பிராந்தியத்தில் விமான தாமதங்கள் நிலவுகின்றது, இதனால் விமான அட்டவணையில் சாத்தியமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனவே உரிய விவரங்களை பெறுவதற்கு அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்வது சாலச் சிறந்தது." என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |