ஊடகவியலாளர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் :சர்வதேச விசாரணைக்கு ஐ.நா வலியுறுத்து
லெபனான் மீதான போரில், அந்நாட்டைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அவையின் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில், அல் மனார் எனும் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் அலி ஷோயப் கடந்த மார்ச் 28 அன்று கொல்லப்பட்டார். அலி ஷோயபின் கொலைக்குப் பொறுப்பேற்ற இஸ்ரேல் இராணுவம் அவர் ஹிஸ்புல்லாவின் ராத்வான் பிரிவில் செயல்பட்டு வந்ததாகக் குற்றம்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக அவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் போலியானவை என உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மூவர் படுகொலையும் இஸ்ரேலின் நொண்டிச்சாட்டும்
இதேபோல், அல் மயாதீன் நிறுவனத்தின் பத்திரிகையாளர் ஃபாத்திமா ஃபுதூனி மற்றும் அவரது சகோதரரும், ஒளிப்பதிவாளருமான முகமது ஃபுதூனி ஆகியோரைக் கொன்றதாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல் இராணுவம், அவர்களும் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையில் இயங்கியதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. நிபுணர்கள் வியாழக்கிழமை (ஏப். 2) கோரிக்கை விடுத்துள்ளனர்.
வன்மையாக கண்டிக்கும் ஐ.நா
இதுபற்றி, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்திரிகையாளர்களைக் குறிவைத்துக் கொல்வதையும், பின்னர் அதற்கு நம்பத்தகுந்த ஆதாரத்தையும் வழங்காமல் அவர்கள் ஆயுதக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறுவதையும் இஸ்ரேல் தற்போது ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளது.இதனை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, காஸா மற்றும் லெபனானில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலின் தாக்குதல்களில் 231 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். இதில், காஸாவில் மட்டும் 210 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்