கத்தோலிக்க தேவாலயத்தில் தங்கியிருந்த தாய்,மகள் இஸ்ரேல் இராணுவத்தால் சுட்டுக்கொலை
காசாவின் ஒரே கத்தோலிக்க தேவாலயத்தில் தங்கியிருந்த தாய் மற்றும் மகள் இஸ்ரேலியய சினைப்பர் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, இஸ்ரேல் மீது வெள்ளை மாளிகை கவலை தெரிவித்துள்ளது.
"இந்த குறிப்பிட்ட சம்பவம் குறித்து இஸ்ரேலிய அரசாங்கத்திடம் நாங்கள் எங்கள் கவலைகளை தெரிவித்துள்ளோம், காயமடைந்தவர்கள், அவர்கள் தகுந்த மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கு பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும்" என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறினார்.
இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால்
இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், காசாவில் உள்ள பொதுமக்களை சிறப்பாகப் பாதுகாக்க இஸ்ரேலால் "இன்னும் செய்ய முடியும்" என்று கிர்பி தெரிவித்தார்.
Pope Francis appealed on Sunday for an end to the war ravaging the Holy Land, praying especially for Christians sheltered in the Holy Family Catholic Parish in #Gaza.https://t.co/qlgCuqDhDU pic.twitter.com/bzPsPs1yEQ
— The Palestine Chronicle (@PalestineChron) December 17, 2023
எவ்வாறாயினும், "இஸ்ரேலியர்கள் வெளியே சென்று அப்பாவி மக்களை படுகொலை செய்வதை ஒரு போரின் நோக்கமாகவும், ஒரு தந்திரோபாய செயல்பாட்டுத் தேவையாகவும் ஆக்குகிறார்கள் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் அமெரிக்கா காணவில்லை" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
வெகு தொலைவில் உள்ளது
“இப்போது மக்கள் கொல்லப்படுவதும், மக்கள் காயமடைவதும் நடக்கிறது. நாங்கள் அதை ஏற்கிறோம், ஆனால் இது அவர்களின் போர் நோக்கங்களின் ஒரு பகுதி என்று சொல்வதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது,” என்று கிர்பி கூறினார்.
During a TV interview, Deputy Mayor of Jerusalem Fleur Nahoum stuttered and denied the existence of churches and Christians in Gaza, claiming they were 'driven out by Hamas.'
— Quds News Network (@QudsNen) December 19, 2023
The host later confronted her about the recent killing of Christians in the Holy Family Parish church two… pic.twitter.com/jpO1JiwP7w
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |