தொடரும் இஸ்ரேலின் கொடூர தாக்குதல்கள்: காசாவில் பலியாகும் அப்பாவிகள்
காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலால் 53 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாப்பான மண்டலமாக அறிவிக்கப்பட்ட தெற்கு அல்-மசாவி உட்பட காசா முழுவதும் நேற்று (02) இஸ்ரேல் இராணுவம் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம்
அல்-மசாவியில் ஒரு உணவகத்தில் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியதில் ஒரு முதியவர் மற்றும் அவரது நான்கு மகன்கள் மற்றும் பேரன் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மத்திய காசாவின் அல்-புரேஜ் அகதிகள் முகாமில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி எச்சரிக்கை
மத்திய காசாவின் டெய்ர் அல்-பாலாக்கில் ஒரு வீட்டின் மீது நடந்த மற்றொரு இஸ்ரேலிய தாக்குதலில் பெண்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
அண்மையில் மக்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேற்ற இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல், தெற்கில் இருந்து வடக்கு காசாவுக்குச் செல்லும் வழியை அடைத்தது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், தங்கள் படைகள் காசா நகரை சுற்றிவளைக்கும் நிலைக்கு நெருங்கிவிட்டதாகவும் மற்றும் அங்கிருந்து வெளியேறாமல் எஞ்சியிருக்கும் எவரும் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத ஆதரவாளர்கள் என்று கருதப்படுவார்கள் எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
