காசா மக்களுக்கு விழப்போகும் பேரிடி : காசாவின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றும் இஸ்ரேல்
காசா (Gaza) பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, காலவரையின்றி அங்கு தங்கள் இருப்பை நிறுவும் திட்டத்தை இஸ்ரேலின் (Israel) பாதுகாப்பு அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று (05.05.2025) காலை கூடிய அமைச்சரவையில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், இது ஹமாஸ் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, இலட்சக்கணக்கான பலஸ்தீனியர்களை தெற்கு காசாவிற்குள் இடம் பெயர்க்கும் சாத்தியக்கூறும் உள்ளது என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சரவை
ஏற்கனவே போரின் பேரில் காசாவின் பாதி பகுதியில் இஸ்ரேல் கட்டுப்பாடு செலுத்தி வருகிறது.
இந்நிலையில் முழுமையான ஆக்கிரமிப்பை இஸ்ரேல் போரின் போர்வையில் நிறுவ முயற்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேல் தனது திட்டத்தை நிறைவேற்ற மேலும் ஆயிரக்கணக்கான ரிசர்வ் வீரர்களை காசாவில் நிறுத்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை இஸ்ரேலின் இராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இயால் ஜமீர், காசாவின் பல பகுதிகளில் கூடுதல் இராணுவ நடவடிக்கைகள் நடைபெறும் என்றும், ஹமாஸ் உட்கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
