காசா நகரை கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்
காசா நகரை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்துக்கு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸைத் தோற்கடிக்கவோ அல்லது கடத்தப்பட்டவர்களைத் திரும்பப் பெறவோ முடியாது என்று அமைச்சரவை அமைச்சர்களில் பெரும்பாலானோர் நம்பியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த அலுவலகம் கூறியுள்ளது.
எனினும் இந்த நடவடிக்கை பேரழிவு விளைவுகளை" ஏற்படுத்தக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை
அத்துடன் பணயக்கைதிகளுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அச்சம் வெளியிட்டுள்ளது.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், பிரதேசத்திற்குள் கூடுதல் உதவிகளை அனுமதிக்கவும், தமது நட்பு நாடுகள் உட்பட சர்வதேச அழுத்தத்தை, இஸ்ரேல் எதிர்கொள்ளும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், காசா நகரத்தை ஆக்கிரமிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐந்து கொள்கைகள் ஆகியவற்றை விபரிக்கும் ஒரு அறிக்கையை நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அமைச்சரவை பெரும்பான்மை
இது அமைச்சரவை பெரும்பான்மை வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறுகிறது.
ஹமாஸ் அமைப்பை நிராயுதமாக்குவது.
அனைத்து பணயக்கைதிகளையும் - உயிருடன் இருப்பவர்களையும் மற்றும் இறந்தவர்களையும் திருப்பி அனுப்புதல்.
காசா பகுதியை இராணுவ மயமாக்குதல்.
காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு கட்டுப்பாடு.
ஹமாஸ் அல்லது பாலஸ்தீன அதிகார சபை அல்லாத ஒரு மாற்று சிவில் அரசாங்கத்தை நிறுவுதல் என்பன இந்த ஐந்து அம்சத் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 மணி நேரம் முன்
