பாடசாலை மீது இஸ்ரேல் மிலேச்சத்தனமான தாக்குதல் - காசாவில் 20 பேர் பலி
காசாவில் (Gaza) பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் (Israel) இராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பாடசாலையில் போரினால் வீடுகளை இழந்த பலஸ்தீன மக்கள் முகாமிட்டு தங்க வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண முகமை என தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் – காசாவுக்கிடையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியிலிருந்து மோதல் இடம்பெற்று வருகின்றது.
ஹமாஸ் கைதிகளை விடுவிப்பது
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
An unprecedented humanitarian catastrophe continues to unfold in Gaza as hostilities rage on.
— United Nations (@UN) December 16, 2024
Women & girls are facing severe challenges, including 50,000 pregnant women who have been left without the essentials to survive.
See how @UNFPA is responding: https://t.co/mMI1EFlW9a pic.twitter.com/TNg1x68IJj
இக் கலந்துரையாடல் காசாவில் ஹமாஸ் கைதிகளை விடுவிப்பது மற்றும் சிரியாவின் சமீபத்திய நிலைமை குறித்து இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகருக்கருகில் உள்ள பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |