மீண்டும் அதிரும் காசா: மீதமுள்ள பணய கைதிகள் தொடர்பில் இஸ்ரேலிய ஊடகம் தகவல்
ஹமாஸ் பிடியில் மீதமிருக்கும் பணயக் கைதிகள் தொடர்பாக இஸ்ரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி ஹமாஸின் பிடியில் இன்னும் 137 பணயக் கைதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் நிறுத்தம் முடிவு பெற்றுள்ள நிலையில், காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் மேற்கொள்வதற்கு ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.
பணயக் கைதிகள் பரிமாற்றம்
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 137 பணயக் கைதிகள் இருப்பதாக இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் எய்லோன் லெவியை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, போர் நிறுத்ததின் போது பணயக் கைதிகளை பரிமாற்றம் செய்ததில் மொத்தமாக இதுவரை 110 பேர் வீடு திரும்பியுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள பணயக் கைதிகளில் 115 பேர் ஆண்கள், 20 பேர் பெண்கள், 3 குழந்தைகள் உள்ளனர், அதில் 10 பேர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மேலும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |