அடுத்த 12 மணிநேரத்திற்குள்...! ஈரானியர்களுக்கு இஸ்ரேல் விடுத்த அபாய எச்சரிக்கை
ஈரானிய குடிமக்கள் அடுத்த 12 மணிநேரத்திற்குத் தொடருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தொடருந்து பாதைகளிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகி இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) விடுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்த அறிக்கையில், “அன்புள்ள குடிமக்களே, உங்கள் பாதுகாப்பிற்காக ஈரான் நேரப்படி இன்று இரவு 21:00 மணி வரை தொடருந்துகளில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலைநாட்டு இணையதளங்கள்
நீங்கள் தொடருந்துகளில் இருப்பதும் தொடருந்து பாதைகளுக்கு அருகில் இருப்பதும் உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானில் மேலைநாட்டு இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள காலக்கெடு முடிவடைவதற்குச் சரியாக ஆறரை மணிநேரத்திற்கு முன்னதாக இஸ்ரேலின் இந்த எச்சரிக்கை நிறைவடைகிறது.
போக்குவரத்துக் கட்டமைப்புகள்
ஈரானின் போக்குவரத்துக் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதையே இஸ்ரேலின் இந்த முன்னெச்சரிக்கை சுட்டிக்காட்டுவதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

ஏற்கனவே ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஈரான் இணங்கவில்லை என்றால், பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட ஈரானின் முக்கிய சிவிலியன் உள்கட்டமைப்புகளை அழிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
முக்கியமான சிவிலியன் இலக்குகளைத் தாக்குவது சர்வதேசச் சட்டங்களின்படி போர்க்குற்றமாகக் கருதப்படலாம் எனப் பல்வேறு தரப்புகள் சுட்டிக்காட்டி வரும் நிலையிலும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நகர்வுகள் போர் தீவிரமடைவதையே காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |