இருளில் மூழ்கப்போகும் இஸ்ரேல் : ஈரானின் தாக்குதல் வியூகத்திற்குள் முக்கிய இரண்டு மின்நிலையங்கள்
ஈரானிய எரிசக்தி உள்கட்டமைப்பு மீது நடத்தப்படும் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் தாக்கவிருக்கும் இலக்குகளின் பட்டியலில் இரண்டு இஸ்ரேலிய மின் நிலையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று தகவலறிந்த வட்டாரம் ஒன்று தெரிவித்ததாக ஈரானிய ஊடகமொன்று குறிப்பிட்டது.
இஸ்ரேல், ஈரானிய எரிசக்தி வசதிகளைத் தாக்கத் தயாராகி வருவதாக, ஒரு இஸ்ரேலிய இராணுவ அதிகாரியை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, ஈரானில் முடிவெடுக்கும் அதிகாரிகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தஸ்னிம் செய்தி நிறுவனத்திடம், "இஸ்ரேலிய ஆட்சிக்கு மின்சாரம் வழங்கும் இரண்டு முக்கிய மின் நிலையங்கள், தாக்குதல் 'இலக்குகளின் பட்டியலில்' சேர்க்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தன.
தெஹ்ரானின் 'பதிலடி' கொள்கை
இந்த முடிவு, தெஹ்ரானின் 'பதிலடி' கொள்கையின் கட்டமைப்பிற்குள் மதிப்பிடப்படுகிறது மற்றும் ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் பதிலளிக்கத் தயாராக இருப்பதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

முன்னதாக, இஸ்ரேல், ஈரானிய எரிசக்தி வசதிகளைத் தாக்கத் தயாராகி வருகிறது, ஆனால் அமெரிக்காவிடமிருந்து பச்சை சமிக்ஞைக்காகக் காத்திருக்கிறது என்று ஒரு மூத்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி சனிக்கிழமை (04)கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.
அடுத்த வாரத்திற்குள் தாக்குதல்கள் நிகழ வாய்ப்பு
அடுத்த வாரத்திற்குள் இதுபோன்ற தாக்குதல்கள் நிகழ வாய்ப்புள்ளது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்ததைத் தொடர்ந்து இந்தக் கருத்துகள் வெளியாகின.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |