எல்லை மீறும் இஸ்ரேல்: ஐ.நா மனிதாபிமான உதவி மையத்தின் மீது வான் தாக்குதல்
தெற்கு காசா பகுதியில் உள்ள மனிதாபிமான உதவி விநியோக மையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர்.
பலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சி (UNRWA) மத்திய ரஃபாவில் நடத்தும் விநியோக மையத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த தாக்குதலினால் காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேரழிவு
அத்தோடு, இந்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய தரப்பில் இருந்து எந்த வித கருத்துக்களும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
அதேவேளை, காசாவில் 31,272 பலஸ்தீனியர்கள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 73,024 பேர் பேரழிவு மற்றும் தேவைகளின் பற்றாக்குறைக்கு மத்தியில் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |