இஸ்ரேல் காசா போரின் எதிரொலி: மாலைதீவுக்குள் இஸ்ரேலியர்கள் நுழையத் தடை விதித்த அரசு
இஸ்ரேலிய(Israel) மக்கள் மாலைதீவுக்குள் வருவதற்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அங்குள்ள இஸ்ரேலியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில்(Gaza) இஸ்ரேல் அரசு மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராக இஸ்ரேலியர்கள் தீவில்(Maldives) போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் சட்டங்களை மாற்ற அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய அரசாங்கத்தின் முடிவு
அமைச்சரவை பரிந்துரையின் பேரில் அதிபர் முய்சு இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த செயல்முறையை மேற்பார்வையிட துணைக் குழுவொன்றை அமைக்கவும் தீர்மானித்துள்ளதாக மாலைதீவு அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவு குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் அலி இஹ்சானும் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அலி இஹ்சானுடன், இஸ்லாமிய அமைச்சர், அட்டர்னி ஜெனரல், பொருளாதார அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரும் இந்த துணைக்குழுவில் இடம்பெறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய குடிமக்களுக்கு தடை விதிப்பது மட்டுமின்றி, பலத்தீனம் தொடர்பான முக்கிய முடிவுகளையும் மாலைதீவு எடுத்துள்ளது.
மாலைதீவு அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு சில உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.ஆனால், சில நாடுகள், இஸ்ரேல் செய்யும் செயல்களுக்கு இஸ்ரேல் மக்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |