பலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு: நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்
Sri Lanka
Negombo
Palestine
Israel-Hamas War
Gaza
By Harrish
மத்திய கிழக்கில் பலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேலின் (Israel) ஆக்கிரமிப்பை கண்டித்து நீர்கொழும்பில் ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்பாட்டமானது இன்று (18.04.2025) நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது ஏற்பட்ட துன்பத்தை நினைவுகூரும் புனித வெள்ளியன்று “பெரிய வெள்ளிக்கிழமை அர்த்தமுள்ளதாக்குவோம்” என்ற தொனிப் பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ஆர்பாட்டம்
அத்துடன், இந்த ஆர்ப்பாட்டத்தை 'கித்துசர' அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதன்போது, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு எதிரான சுலோக பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்க, இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மூவின மக்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி