ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதி படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு
லெபனானின்(lebanon) பெய்ரூட் பகுதியில் நேற்று(07) தாம் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மிக முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
சுஹைல் ஹுசைன் ஹுசைனி என்ற தளபதியே கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இவர் ஈரானுக்கும்(iran) ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஆயுதங்களைக் கொண்டு செல்வதில் "முக்கியமான" பங்கு வகித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை குறிப்பிட்டது.
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தவர்
ஹுசைனி லெபனான் மற்றும் சிரியாவில்(syria) இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை ஒருங்கிணைத்ததாகவும், ஜிஹாத் கவுன்சில், ஹிஸ்புல்லாவின் மூத்த இராணுவ தலைமைக் குழுவில் உறுப்பினராகவும் இருந்ததாக கூறப்படுகிறது.
இவரது மரணம் தொடர்பாக ஹிஸ்புல்லாவிடமிருந்து எந்தவொரு அறிவித்தலும் வெளியாகவில்லை.
ஹமாஸின் மூத்த தலைவர்களும் பலி
முன்னதாக, ஒக்டோபர் 3 ஆம் திகதி இஸ்ரேலிய விமானப்படை (IAF)காசா அரசாங்கத்தின் தலைவர் ரவ்ஹி முஷ்தாஹா உட்பட, ஹமாஸின் மூன்று மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதாக அறிவித்தது. வடக்கு காசாவில் உள்ள ஒரு நிலத்தடி பதுங்கு குழி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
צה״ל חיסל את סהיל חסין חסיני, ראש מערך המטה של ארגון הטרור חיזבאללה
— צבא ההגנה לישראל (@idfonline) October 8, 2024
אתמול, בהכוונה מדוייקת של אגף המודיעין, מטוסי קרב של חיל האוויר תקפו באופן ממוקד במרחב ביירות וחיסלו את סהיל חסין חסיני, ראש מערך המטה של ארגון הטרור חיזבאללה>>
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |