சுமோவுக்காக நரித்தந்திர நாடகத்தால் பறிக்கப்பட்டதா சத்தியலிங்கம் பதவி !
சத்தியலிங்கம் (P. Sathiyalingam) சுகவீனமுற்றிருப்பதனால் சுமந்திரனுக்கு (M. A. Sumanthiran) புதிய பதில் பொதுச்செயலாளராக பதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், சத்தியலிங்கம் உண்மையிலேயே சுகவீனமுற்றுதான் இருக்கின்றாரா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக பிரித்தானியாவின் (United Kingdom) அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (T. Thibakaran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அப்படி சத்தியலிங்கம் சுகவீனமுற்றிருந்தால் முக்கியமாக பார்க்கப்படும் தேசிய பட்டியல் குறித்து அல்லவா கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
சத்தியலிங்கமும், தனக்கு சுகவீனம் எனபதால் நடாளுமன்றத்தில் உரையாற்றுவது மற்றும் நாடாளுமன்றத்திற்கு செல்வது தொடர்பில் அல்லவா கவனம் செலுத்தியிருக்க வேண்டும் ஆனால் கட்சி குறித்து அதீத கவனம் ஏன் ?
கட்சி வேலை என்பது அவரது வீட்டில் இருந்து செய்யும் வேலைதானே அது குறித்த அதீத கவனம் ஏன் ? காரணம் இங்கு திட்டமிடப்பட்டு நரித்தந்திர நாடகமொன்று நடத்தப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழரசு கட்சியின் தற்போதைய நிலை, தமிழரசு கட்சியின் தோல்விக்கான காரணம், சி.வி.கே சிவஞானம் மற்றும் சுமந்திரனின் கூட்டணி அத்தோடு எதிர்கால தமிழ் அரசியல் குறித்து அவர் விரிவாக தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
