யாழ்ப்பாணத்தில் இன்றிரவு நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பாரிய விபத்து
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Sumithiran
கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மிருசுவில் ஏ9 வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) இரவு 7மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிச் சேதமடைந்ததுடன்-மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சிப் பகுதியில் இருந்து யாழ் நோக்கி வருகை தந்த காரும்-யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த டிப்பர்,கூலர் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியனவும் ஒன்றோடு ஒன்று மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.
வாகனங்கள் கடுமையாக சேதம்
இதில் விபத்துக்குள்ளான வாகனங்கள் கடுமையாக சேதமடைந்திருப்பதுடன்-மூவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்