தெல்லிப்பளை வைத்தியசாலையில் கொவிட் சிகிச்சை பிரிவு அமைக்க உதவி!
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவு அமைப்பதற்கு ஏ.வி.ஆர். அறக்கட்டளை ஊடாக ஒரு லட்சம் ரூபா வழங்கப்பட்டது.
இந்த நிதியை ஏ.வி.ஆர். அறக்கட்டளையின் இயக்குநர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் திலீபன் மற்றும் நோயாளர் நலன்புரிச் சங்கச் செயலாளரிடம் வழங்கி வைத்தனர்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களுக்கு தனியான விடுதி வசதி இல்லாமையால், நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் முதற்கட்டமாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாவை வழங்கி சமூக நலன் கொண்ட கொடைவள்ளல்களிடமும் பகிரங்க உதவிக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் சார்பாக அதன் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகளன் ஒரு லட்சம் ரூபாவை வழங்கியமையைத் தொடர்ந்து ஏ.வி.ஆர். அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.