யாழில் 95 பேர் உட்பட வடக்கில் 137 தொற்றாளர்கள் கண்டறிவு
kilinochchi
mullaitivu
jaffnacovid
By Vanan
யாழ். மாவட்டத்தில் 95 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை (மே 18) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 937 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவர்களில் 137 பேருக்கு தொற்றுள்ளமை இன்று கண்டறியப்பட்டது.
யாழ். மாவட்டத்தில் 95 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 31 பேரும், வவுனியா மாவட்டத்தில் 7 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 பேரும் என 137 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்