யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் கொவிட்!! 101 பேருக்கு தொற்று - இருவர் பலி
covid
jaffna
death
patient
By Vanan
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91ஆக உயர்வடைந்துள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நயினாதீவைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும், வெள்ளாந்தெருவைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இன்று செவ்வாய்க்கிழமை 101 பேருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.
இதற்கமைய, யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 291ஆக உயர்வடைந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி