யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு கொவிட் மரணம் பதிவு
corona
jaffna
death
By Vanan
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99ஆக உயர்வடைந்துள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவரே இன்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் சுகாதார விதிகளுக்கு அமைய மின் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் இன்று நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 28 பேருக்கு கொவிட்-19 தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் இன்று மாலை வரை 5 ஆயிரத்து 390 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி