யாழில் இன்றும் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு
covid
jaffna
death
By Sumithiran
யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை மேலும் 5 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதடியைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்புத் துறையைச் சேர்ந்த 79 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூரைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும் கோண்டாவிலைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரும் என 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176ஆக உயர்வடைந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி