யாழ். மாநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா
srilanka
jaffna
patient
covid 19
By Vasanth
யாழ். மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து, சுயதனிமைப்படுத்தலில் இருந்த அவர்களுக்கு, முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த 5 பேருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி