“சப்ரிகம” வின் கீழ் யாழில் 793 திட்டங்கள் நிறைவு
யாழில் நிறைவான கிராமத் திட்டத்தின் கீழ் (சப்ரீகம) சுமார் 864 மில்லியன் (864,787,865.00) ரூபா செலவில் 793 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்டு முதன்மைப் படுத்தப்பட்ட திட்டங்களே இவ்வாறு நிறைவடைந்த நிலையில் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் ஆரம்பித்தபோது பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். சிலர் குறித்த திட்டத்திற்கான நிதி தெடர்ந்து கிடைக்குமா? அல்லது அடிக்கல் நாட்டலுடன் முடிந்துவிடுமோ என்ற அச்சத்தை வெளியிட்டனர்.
ஆனால், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உறுதியான செயற்பாடு காரணமாக குறித்த திட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது.
இதன்படி - நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் 5 திட்டங்களுக்காக சுமார்11 மில்லியன் (11,844,604.00) ரூபாவும்,
வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் 40 திட்டங்களுக்காக சுமார் 59 மில்லியன் (59,693,090.00) ரூபாவும்,
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 33 திட்டங்களுக்காக சுமார் 55 மில்லியன் (55,719,191.00) ரூபாவும்,
ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் 18 திட்டங்களுக்காக சுமார் 29 மில்லியன் (29,849,928.00) ரூபாவும்,
நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் 54 திட்டங்களுக்காக 79 மில்லியன் (79,600,00.00) ரூபாவும்,
காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் 14 திட்டங்களுக்காக சுமார் 17 மில்லியன் (17,742,438.00) ரூபாவும்,
யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் 33 திட்டங்களுக்காக சுமார் 55 மில்லியன் (55,719,191.00) ரூபாவும்,
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 37 திட்டங்களுக்காக சுமார் 49 மில்லியன் (49,247,820.00) ரூபாவும்,
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் 37 திட்டங்களுக்காக சுமார் 59 மில்லியன் (59,700,000.00) ரூபாவும்,
தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் 66 திட்டங்களுக்காக சுமார் 89 மில்லியன் (89,550,000.00) ரூபாவும்,
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 52 திட்டங்களுக்காக சுமார் 61 மில்லியன் (61,690,000.00) ரூபாவும்,
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 80 திட்டங்களுக்காக சுமார் 119மில்லியன் (119,400,000.00) ரூபாவும்,
கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 50 திட்டங்களுக்கக சுமார் 69 மில்லியன் (69,650,000.00) ரூபாவும்,
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 58 திட்டங்களுக்காக சுமார் 69 மில்லியன் (69,592,652.00) ரூபாவும்,
மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 29 திட்டங்களுக்கக சுமார் 35 மில்லியன் (35,794,240.00) ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.