ஆரம்பமானது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
யாழ் (Jaffna) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.
குறித்த கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்று வருகின்றது.
ஒருங்கிணைப்பு குழு
இடம்பெற்று வரும் கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயலாளரும் மாவட்ட அரச அதிபருமான பிரதீபன், வடக்கின் ஆளுநர் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், ரஜீவன், அர்ச்சுனா, பவானந்தராஜா, இளங்குமரன் மற்றும் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அத்தோடு, திணைக்களங்களின் பதவிநிலை அதிகாரிகள் பிரதேச செயலர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், பாதுகாப்பு தரப்பின் அதிகாரிகள் மற்றும் பிரதேச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டு நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்திக்கான திட்ட முன்மொழுவுகள் தொடர்பில் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உத்தேச ஒதுக்கீடு
குறித்த கலந்துரையாடலின் போது பாதீட்டில் வடக்கிற்காக அறிவிக்கப்பட 5 ஆயிரம் மில்லியன் உத்தேச ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள கிராமிய வீதிகளின் அபிவிருத்தி, மழை நீர் சேகரிப்பு திட்டம், குடி நீர், போக்குவரத்து, வீட்டுத்திட்டம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்படவுள்ளது.
பொது அமைப்புகளின் பிரதினிதிகள் எவரும் இக்கூட்டத்தில் அழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
















பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 2 நாட்கள் முன்
